40 நாட்கள் அமேசான் காட்டில் வாழ்ந்த குழந்தைகள்
கடந்த மே மாதம் அமெரிக்கா நாட்டின் கொலம்பியா மாகாணத்தில் இருந்து சிறிய ரக தனியார் விமானம் ஏழு பயணிகளுடன் புறப்பட்டது. அதில் மூன்று பெரியவர்களும் நான்கு குழந்தைகளும் பயணித்தனர். அந்த விமானம் அமேசான் காடுகளின் மேல் பறந்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த இரண்டு பெரியவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிர் பிழைத்த குழந்தைகளின் வயது முறையே 13, 9, 7 ஆகும். மற்றும் 11 மாத குழந்தையும் உயிர் பிழைத்தது. அந்த குழந்தைகளின் தாய் விமானம் நொறுங்கிய பின் நான்கு நாட்கள் வரை உயிருடன் இருந்தார். இறக்கும் தருவாயில் இருந்த அந்த தாய் தனது மூத்த மகளுக்கு மற்ற சகோதர சகோதரிகளை பாதுகாப்பது தொடர்பான அறிவுரை வழங்கினார். நான்கு நாட்களுக்குப் பின்பு அந்த குழந்தைகளின் கண்ணெதிரிலேயே உயிரிழந்தார். அந்த குழந்தைகள் 40 நாட்கள் கொடிய விஷப் ...