40 நாட்கள் அமேசான் காட்டில் வாழ்ந்த குழந்தைகள்
கடந்த மே மாதம் அமெரிக்கா நாட்டின் கொலம்பியா மாகாணத்தில் இருந்து சிறிய ரக தனியார் விமானம் ஏழு பயணிகளுடன் புறப்பட்டது. அதில் மூன்று பெரியவர்களும் நான்கு குழந்தைகளும் பயணித்தனர்.
அந்த விமானம் அமேசான் காடுகளின் மேல் பறந்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த இரண்டு பெரியவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிர் பிழைத்த குழந்தைகளின் வயது முறையே 13, 9, 7 ஆகும். மற்றும் 11 மாத குழந்தையும் உயிர் பிழைத்தது. அந்த குழந்தைகளின் தாய் விமானம் நொறுங்கிய பின் நான்கு நாட்கள் வரை உயிருடன் இருந்தார்.
இறக்கும் தருவாயில் இருந்த அந்த தாய் தனது மூத்த மகளுக்கு மற்ற சகோதர சகோதரிகளை பாதுகாப்பது தொடர்பான அறிவுரை வழங்கினார். நான்கு நாட்களுக்குப் பின்பு அந்த குழந்தைகளின் கண்ணெதிரிலேயே உயிரிழந்தார்.
அந்த குழந்தைகள் 40 நாட்கள் கொடிய விஷப் பாம்புகள் மற்றும் வன விலங்குகள் நிறைந்த அந்த காட்டில் காப்பாற்ற யாருமின்றி அங்கேயே இருந்தனர். காட்டில் கிடைத்த பழங்களை உண்டு வாழ்ந்தனர்.
அந்த குழந்தைகளின் தந்தை மற்றும் பாட்டியின் புகாரின் பேரில் சுமார் 150 வீரர்கள் அவர்களைத் தேடி காட்டிற்குள் நுழைந்தனர். தீவிரமாக 40 நாட்கள் தேடி அந்த குழந்தைகளை கண்டு பிடித்தனர்.
அந்த குழந்தைகள் தங்கள் தாய் இறந்த செய்தியை அழுதுகொண்டே மீட்புக் குழுவினரிடம் தெரிவித்தனர். குழந்தைகள் நால்வரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் நலமுடன் இருப்பதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

Comments
Post a Comment