Posts

40 நாட்கள் அமேசான் காட்டில் வாழ்ந்த குழந்தைகள்

Image
              கடந்த மே மாதம் அமெரிக்கா நாட்டின் கொலம்பியா மாகாணத்தில் இருந்து சிறிய ரக தனியார் விமானம் ஏழு பயணிகளுடன் புறப்பட்டது. அதில் மூன்று பெரியவர்களும் நான்கு குழந்தைகளும் பயணித்தனர்.               அந்த விமானம் அமேசான் காடுகளின் மேல் பறந்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த இரண்டு பெரியவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.               உயிர் பிழைத்த குழந்தைகளின் வயது முறையே 13, 9, 7 ஆகும்.  மற்றும் 11 மாத குழந்தையும் உயிர் பிழைத்தது. அந்த குழந்தைகளின் தாய் விமானம் நொறுங்கிய பின் நான்கு நாட்கள் வரை உயிருடன் இருந்தார்.              இறக்கும் தருவாயில் இருந்த அந்த தாய் தனது மூத்த மகளுக்கு மற்ற சகோதர சகோதரிகளை பாதுகாப்பது தொடர்பான அறிவுரை வழங்கினார். நான்கு நாட்களுக்குப் பின்பு அந்த குழந்தைகளின் கண்ணெதிரிலேயே உயிரிழந்தார்.            அந்த குழந்தைகள் 40 நாட்கள் கொடிய விஷப் ...

மன்னராக முதல் பிறந்த நாளைக் கொண்டாடினார் மன்னர் மூன்றாம் சார்லஸ்

Image
               இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி மரணமடைந்தார். அவரது மூத்த மகன், வேல்ஸ் இளவரசர் சார்லஸ், தனது தாயின் மறைவுக்குப் பின் மன்னராக அரியணையில் அமர்ந்தார். இப்போது அவர் மன்னர் மூன்றாம் சார்லஸ் என்று அழைக்கப்படுகிறார். அவர் மன்னராக பொறுப்பேற்ற பின் இன்று (நவம்பர் 14ம் தேதி) தனது 74வது பிறந்த நாளை கொண்டாடினார். அவர் மன்னராகக் கொண்டாடும் முதல் பிறந்த நாள் இதுவாகும்.                 அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு அம்சமாக ராணுவ வீரர்கள் பக்கிங்காம் அரண்மனையில் பாண்ட் இசைத்து பிறந்த நாள் வாழ்த்து பாடினர்.                பீரங்கி குண்டுகள் முழங்கி அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு கௌரவிக்கப்பட்டார். லண்டன் மாநகரமெங்கும் ஆங்காங்கே குண்டுகள் முழங்கப் பட்டு அரசரின் பிறந்த நாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

எஜமானரைக் காப்பாற்ற தன் உயிரைக் கொடுத்த நாய்கள்

Image
          நாய்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது நன்றி உணர்வு தான். இன்று பலரும் நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். நாய்களும் குழந்தைகள் போல் மனிதர்களிடம் நடந்து கொள்ளும்.          மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை அடுத்த புதுப்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம். அவர் ஐந்து நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்தார்.          மாணிக்கம் தன் நாய்களுடன் இரவு நேரங்களில் காட்டுப் பன்றி வேட்டைக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று வழக்கம் போல் வேட்டைக்கு நாய்களுடன் கிளம்பி உள்ளார்.          செல்லும் வழியில் அசோக் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சட்ட விரோதமாக அமைக்கப் பட்ட மின்வேலியை கடக்க முற்பட்ட நாய் ஒன்று மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தது.         அதைக் கண்ட மற்ற நாய்கள் வேலியில் மின்சாரம் பாய்வதை மாணிக்கத்துக்கு தெரிவிக்கும் விதமாக ஒன்றன் பின் ஒன்றாக வேலியை கடக்க முற்பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. நாய்களை காப்பாற்ற சென்ற மாணிக்கமும் மின்சாரம் பாய்ந்து உயிரி...

இளைஞர்களின் தீரச் செயல் - வெள்ளத்தில் சிக்கியவர் மீட்பு

Image
            தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல மாவட்டங்களில் கன மழை முதல் அதி கன மழை பெய்து வருகிறது.            தமிழகத்தில் மழை காரணமாக பல ஊர்களில் உள்ள ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. சில இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.             இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் காங்கியனூர் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 2800 கண அடி நீர் திறந்து விடப்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.              அந்த ஆற்றில் நபர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார். இதனைக் கண்ட சில இளைஞர்கள் விரைந்து ஆற்றில் குதித்து அந்த நபரை கரைக்கு மீட்டு வந்தனர்.             அந்த நபரிடம் விசாரித்த போது அவர் சரிவர பதிலளிக்கவில்லை. எனவே காவல்துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர் காவல்துறையினர் விசாரணை நடத்தி அந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என கண்டறிந்தனர். வெள்ளத்தில் சிக்கிய நபரைக் காப்பாற்றிய இளைஞர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்...

பொடுகு மற்றும் முகப்பருக்களை குணப்படுத்த இதை செய்து பாருங்களேன்

Image
        இப்போது நாம் ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இரு இலைகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். அந்த இரு இலைகளும் புனித இலைகளாகக் கருதப்படுகிறது.         வேப்பிலை பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அது கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. பல தோல் வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்து. அது அம்மன் குடிகொண்டுள்ள இலையாகக் கருதப்படுகிறது.             துளசியும் வேப்பிலைக்கு நிகரான மருத்துவ குணங்களைக் கொண்டது. பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. அது பெருமாளுக்கு உகந்த இலையாகக் கருதப்படுகிறது.         ஒரு கை அளவு வேப்பிலை மற்றும் அதே அளவு துளசி இரண்டையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.        பொடுகை போக்குவதற்கு, அரைத்த விழுதில் மேலும் சிறிது நீர் விட்டு கரைத்து தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் தலையை ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து அலசவும்.      முகப்பருக்கள் போக்குவதற்கு அரைத்த விழுதை முகத்தில்...

நாய் செய்யும் வேலையைப் பாருங்கள்

Image
              தற்காலத்தில் நாய் மனிதனுக்கு உற்ற துணையாக இருக்கிறது. விலங்குகளில் நாய்க்கு சற்று அறிவு கூடுதலாக இருக்கும்.             தற்போது நிறைய பேர் நாயை செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர். நாய்கள் மனிதர்களுக்கு உதவியாக ஆடு மற்றும் மாடு மேய்ப்பதை ஊடகங்களில் பார்த்திருக்கிறோம்.          மனிதனுடன் பழகிப் பழகி நாய்களுக்கும் மனிதர்களின் பழக்க வழக்கங்கள் தொற்றிக் கொண்டுள்ளது. அப்படி ஒரு நாய் செய்வதை இங்கே பாருங்கள்.          பக்கத்து வீட்டில் சத்தம் கேட்டு நாய் ஒன்று சுவரோரம் ஓடிச் சென்றது. சத்தம் சற்று அதிகமாக இருந்ததால் சண்டையை ஒட்டு கேட்கும் ஆவலில் பின்னங்கால்கள் தென்னை மரத்திலும் முன்னங்கால்களை சுவற்றிலும் வைத்து சுவரில் ஏறி எட்டிப் பார்த்து ஒட்டுக் கேட்டது.

கிட்சனை பெட்ரூமாக மாற்றிய சிறுத்தை

Image
      ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது கோட்டா என்னும் நகரம். இது போட்டி தேர்வுக்கு பெயர் பெற்ற நகரமாக விளங்குகிறது. தற்போது இந்த நகரம் வனவிலங்கு நடமாட்டத்திற்கும் பெயர் பெற்று விளங்குகிறது.               அவ்வப்போது இரவு நேரங்களில் வனவிலங்குகள் சர்வ சாதாரணமாக ஊருக்குள் நடமாடும். அந்த நேரத்தில் நாய், ஆடு போன்றவற்றை இழுத்துச் சென்று விடும்.               சில சமயங்களில் வீடுகளுக்குள் புகுந்தும் நடமாடும். சமீபத்தில் சிறுத்தை ஒன்று ஒரு வீட்டிற்குள் நுழைந்தது.               வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை சமயலறையில் நுழைந்து மேடை மீது ஏறி உறங்கத் தொடங்கியது. இதைக் கண்ட அந்த வீட்டினர் அதிர்ச்சி அடைந்தனர்.               அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வனத் துறையினர் அங்கு விரைந்தனர்.              விரைந்து வந்த வனத் துறையினர் நான்கு மணிநேரம் போராடி அந...