கிட்சனை பெட்ரூமாக மாற்றிய சிறுத்தை
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது கோட்டா என்னும் நகரம். இது போட்டி தேர்வுக்கு பெயர் பெற்ற நகரமாக விளங்குகிறது. தற்போது இந்த நகரம் வனவிலங்கு நடமாட்டத்திற்கும் பெயர் பெற்று விளங்குகிறது.
அவ்வப்போது இரவு நேரங்களில் வனவிலங்குகள் சர்வ சாதாரணமாக ஊருக்குள் நடமாடும். அந்த நேரத்தில் நாய், ஆடு போன்றவற்றை இழுத்துச் சென்று விடும்.
சில சமயங்களில் வீடுகளுக்குள் புகுந்தும் நடமாடும். சமீபத்தில் சிறுத்தை ஒன்று ஒரு வீட்டிற்குள் நுழைந்தது.
வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை சமயலறையில் நுழைந்து மேடை மீது ஏறி உறங்கத் தொடங்கியது. இதைக் கண்ட அந்த வீட்டினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வனத் துறையினர் அங்கு விரைந்தனர்.
விரைந்து வந்த வனத் துறையினர் நான்கு மணிநேரம் போராடி அந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி போட்டு அதை பிடித்தனர். பின்னர் சிறுத்தையை அடர்ந்த காட்டில் விட்டனர்.

Comments
Post a Comment