எஜமானரைக் காப்பாற்ற தன் உயிரைக் கொடுத்த நாய்கள்
நாய்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது நன்றி உணர்வு தான். இன்று பலரும் நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். நாய்களும் குழந்தைகள் போல் மனிதர்களிடம் நடந்து கொள்ளும்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை அடுத்த புதுப்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம். அவர் ஐந்து நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்தார்.
மாணிக்கம் தன் நாய்களுடன் இரவு நேரங்களில் காட்டுப் பன்றி வேட்டைக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று வழக்கம் போல் வேட்டைக்கு நாய்களுடன் கிளம்பி உள்ளார்.
செல்லும் வழியில் அசோக் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சட்ட விரோதமாக அமைக்கப் பட்ட மின்வேலியை கடக்க முற்பட்ட நாய் ஒன்று மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தது.
அதைக் கண்ட மற்ற நாய்கள் வேலியில் மின்சாரம் பாய்வதை மாணிக்கத்துக்கு தெரிவிக்கும் விதமாக ஒன்றன் பின் ஒன்றாக வேலியை கடக்க முற்பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. நாய்களை காப்பாற்ற சென்ற மாணிக்கமும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்ட விரோதமாக மின்வேலி அமைத்த தோட்ட உரிமையாளர் அசோக் குமார் தலைமறைவாக உள்ளார்.



Comments
Post a Comment