இளைஞர்களின் தீரச் செயல் - வெள்ளத்தில் சிக்கியவர் மீட்பு
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல மாவட்டங்களில் கன மழை முதல் அதி கன மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் மழை காரணமாக பல ஊர்களில் உள்ள ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. சில இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் காங்கியனூர் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 2800 கண அடி நீர் திறந்து விடப்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அந்த ஆற்றில் நபர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார். இதனைக் கண்ட சில இளைஞர்கள் விரைந்து ஆற்றில் குதித்து அந்த நபரை கரைக்கு மீட்டு வந்தனர்.
அந்த நபரிடம் விசாரித்த போது அவர் சரிவர பதிலளிக்கவில்லை. எனவே காவல்துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர் காவல்துறையினர் விசாரணை நடத்தி அந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என கண்டறிந்தனர்.
வெள்ளத்தில் சிக்கிய நபரைக் காப்பாற்றிய இளைஞர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


Comments
Post a Comment