Posts

த்ரிஷா வெற்றி கொண்டாட்டத்தில் ஆடியதன் விளைவு

Image
          இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் பாகம் - 1 கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி உலகெங்கும் திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது.         இத்திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன் மற்றும் பல பிரபல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.            இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று உலகளவில் மிகவும் பிரபலமானது. இதில் நடித்த நடிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் கிடைத்தது.             படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்ற வாரம் நடைபெற்றது. அதில் பங்கு கொண்டு நடிகர் நடிகையர் ஆட்டம் பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்தனர். தங்களுக்குள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.            அதிகமாக ஆடிய த்ரிஷாவின் கால்கள் கொண்டாட்டத்தின் முடிவில் வீங்கியது. ஏற்கனவே காலில் வலியுடன் இருந்த த்ரிஷா தற்போது கால் வீக்கமும் சேர்ந்து காலில் கட்டு போட்டுள்ளார்.

ஐப்பசி பௌர்ணமி - சிவபெருமானின் சாபம் நீங்கிய நாள்

Image
              சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த பொழுது உலகமே சந்தோஷத்தில் திளைத்தது. அந்த திருமணத்தை சிறப்பாக நடத்திய பிரம்ம தேவரை சிவனார் பாராட்டினார். இதனால் கர்வமடைந்த பிரம்மா யாரும் கேட்காத தட்சணையை கேட்டார்.               உலகை ஆளும் ஈசனுக்கே தான் திருமணம் செய்து வைத்த அகந்தையுடன், தனக்கு ஈசன் சிறந்த தட்சணை அளிக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு ஈசனும் சம்மதித்தார்.              ஆரம்ப காலத்தில் பிரம்மனுக்கு ஐந்து முகங்கள் இருந்தன. தனது ஐந்து முகங்களுக்கும் வெவ்வேறு திசைகளில் இருந்து ஈசன் தட்சணை அளிக்க வேண்டும் எனக் கேட்டார். ஈசன் நான்கு முகங்களுக்கு நான்கு திசைகளில் இருந்து தட்சணை அளித்தார்.  ஐந்தாவது முகத்திற்கு எந்த திசையில் இருந்து தட்சணை கொடுப்பது என்று அறியாமல் நின்றார்.             பின் ஈசன் ஸ்ரீமன் நாராயணனின் உதவியை நாடினார். பெருமாள் ஈசனிடம் ஐந்தாவதாக திசை என்று ஒன்றும் இல்லை என்றும் அப்படியே இருந்தாலும் அது ஏதேனும் இரு...